Thursday, June 26, 2008

Bloggerwave!

Bloggerwave - ஒரு மிக அருமையான வலை தளம். இதன் மூலம் என் போல் ப்ளாக் வைத்திருப்பவர்கள் சிறிது பணம் சம்பாதிக்க எளிய முறை. இந்த வலைத்தளம் ஐரோப்பிய நாட்டின் மிகப்பெரிய அட்வேர்டிசிங் கம்பெனி.

இந்த Bloggerwave வலைத்தளத்தில் நான் ப்ளாகை ரெஜிஸ்டர் செய்து அவர்களின் பதிலுக்காக காத்திருந்தேன். அடுத்த நாள் என்னுடைய ப்ளாகை அவர்கள் அப்புருவ் செய்து பதில் அனுப்பினர். பின்னர் என்னுடைய முதல் போஸ்டை எழுதுவதற்கு ஒரு வாய்ப்பும் கொடுத்தனர். விருப்பம் இருப்பவர்கள் Bloggerwave வலைத்தளத்தில் சேர்ந்து சிறிது பணம் சேர்க்கும் முயற்சியில் ஈடுபடலாம்.

Friday, June 20, 2008

Dasavatharam Movie Review in my words!

திரு. கமல்ஹாசன் அவர்களின் ரசிகை நான். அவருடைய அனைத்து திரைப்படங்களையும் பார்த்திருக்கும் எனக்கு அவருடைய தசாவதாரம் திரைப்படம் பார்த்து சிறிது ஏமாற்றம். முதலில் அந்த திரைப்படத்தில் பத்து அவதாரத்திற்கு என்ன அவசியம் என்றே எனக்கு புரியவில்லை.

முதல் பாத்திரம் நம்பி. அந்த பாத்திரத்தில் எனக்கு பிடித்த ஒன்று கமலுடைய வசன உச்சரிப்பு. மிக மிக அருமை. அடுத்து எனக்கு தெரிந்து நாத்திகரான கமல் மிக அருமையாக ஓம் நமோ நாராயணாய என்று உச்சரிப்பது. அது முதலில் அவர் குரலா என்ற சந்தேகமும் எனக்கு உண்டு. இதில் என் கவனத்தை ஈர்த்தது நெபோலேஅன் கதாபாத்திரம். அவர் எதற்காக யானை மீதேறி அமர்ந்து இருக்கிறார் என்றே புரியவில்லை. சோழ மன்னன் என்றால் யானை மீதிருந்து இறங்கக்கூடாது என்று இருக்கிறதா என்றே புரியவில்லை. அடித்து அசின் கதாபாத்திரம். அசின் கமலிடம் குழந்தைகாகவாவது நம: சிவாய என்று சொல்லுங்கள் என்று கூறுகிறார். எல்லாம் கேட்க நன்றாக இருந்தாலும், கணவர் இறந்தவுடன் குழந்தையை அவரும் மறந்துவிட்டு மண்டை மோதி எதற்கு இறக்கிறார் என்று புரியவில்லை. இதுதான் கணவருடன் உடன் கட்டை ஏறுவதோ?

அடுத்து கோவிந்த் பாத்திரம். இவர் சாதரண உப்பை எப்படி மறந்தார் என்று புரியவில்லை. மிகப்பெரிய விஞ்ஞானி உப்பின் பெயரை மறந்தார் என்பதே மிகவும் வேடிகயான ஒன்று. அடுத்து அவருடைய இந்தியா பயணம், சிதம்பரம் பயணம், இப்படி அடுத்து அடுத்து அவர் ஒவ்வொரு இடத்தில் பறப்பது முதல் இரண்டு மூன்று காட்சிகளுக்கு நன்றாக இருந்தாலும் பிறகு சலிப்பு தட்டி விடுகிறது. ஒரு சந்தோஷமான விஷயம் என்ன வென்றால், கமல் படத்தில் எப்பொழுதும் இருக்கும் விரசமும், உதட்டு முத்தமும் இதில் இல்லை.

அடுத்து கிருஷ்ணவேணி பாட்டி. இந்த கதாபாத்திரத்திற்கு என்ன அவசியம் என்றே எனக்கு புரியவில்லை. பார்பவரை எல்லாம் கட்டைல போறவனே என்று கூறி வேறுபெற்றுகிறார். வீதியில் சுவாமி வந்திருக்கும் பொது இவருக்கு மட்டும் எப்படி நடக்க இடம் இல்லாமல் போனது என்று தெரியவில்லை மேலும், அங்கு சூழ்ந்திருபவரின் தோள்களில் ஏறி நர்த்தனம் ஆடுகிறார்.

அடுத்து அமெரிக்கா ஜனாதிபதி. இந்த கதாபாத்திரத்தின் அவசியம் புரியவில்லை. அதேபோல், Nacl - அதன் அர்த்தம் தெரியாமல் இருப்பது ஆச்சர்யம்.

அடுத்து நாயுடு - படத்தின் மிக பெரிய பலம். சிரிக்க வைக்கும் ஒரே கதாபாத்திரம். கமல் இந்த கதாபாத்திரத்தில் மிகவும் அருமையாக செய்திருக்கிறார்.

அடுத்து சைனீஸ் கமல் - ஜனாதிபதியை போல் இந்த கதாபாத்திரத்தின் அவசியம் எதற்கு என்றே புரியவில்லை. தேவை இல்லாத கதாபாத்திரம்.

அடுத்து வில்லன் - இவர் பறந்து பறந்து அடிக்கிறார். ஒவ்வொரு கட்டிடமாக ஏறி பறக்கிறார். அவருடைய முதலாளி போலீசிடம் சிக்கியது கூட தெரியாமல் ஹீரோ கமலை துரத்துகிறார்.

அடுத்து - உயர்ந்த மனிதன் - ஒரு இ மெயிலில் படித்தேன். இந்த உயர்ந்த மனிதனை வாமனவதாரதுடன் இணைத்து எழுதி உள்ளனர். எனக்கு அதை படித்து மக்களில் மூடத்தனத்தை நினைத்து சிரிப்பு தன் வந்தது. சுனாமி வந்த பொழுது மசூதியில் மக்கள் அனைவரும் சேர்ந்த போது அவர் ஏதோ காப்பற்றுவது போல் இரண்டு கையையும் பெரிதாக விரிக்கிறார். என்ன அர்த்தம்?

அடுத்து பூவராகன் - இவர் சமூக சேவகர். இவர் கதாபாத்திரமும் அருமை. திருநெல்வேலி தமிழில் வெளுத்து கட்டுகிறார். மிக அருமையான கதாபாத்திரம்.

அடுத்து அவதார் சிங்க் - இந்த கதாபாத்திரமும் எதற்கு என்று தெரியவில்லை. திடீர் என்று வருகிறார், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுகிறார், பாட்டு பாடுகிறார், ரத்தவாந்தி எடுக்கிறார், கடைசியில் குண்டு பாய்ந்து, அந்த குண்டின் மூலம் அவருடைய கான்செர் குணமடைந்து விடுகிறது. மூச்சு வாங்குகிறது எனக்கு. எதற்கு எதெல்லாம்?

ஆகா மொத்தம் கமல் அவர்களின் ரசிகையாக இருந்து, அவருடைய திரைபடத்தை பற்றி இப்படி ஒரு விமர்சனம் எழுத மிகவும் சங்கடமாக இருந்தாலும், இருப்பதை தானே எழுத முடியும்.

சட்டியில் இருந்தால் தானே அகபையில் வரும் !!!!!!!!

Friday, May 9, 2008

Bloggers Unite for Human rights!

Bloggers Unite

Saturday, April 19, 2008

Women after Kids !!

என் கஸின் வீட்டிற்கு சென்று வந்த உடன் இந்த போஸ்ட் எழுத உட்கார்ந்தேன். எழுதுவதற்கு காரணம் சில உள்ளது. என் கசினுக்குஇரண்டாவது குழந்தை பிறந்துள்ளது. அதை பார்பதற்கு நாங்கள் சென்றோம். சில மணி நேரம் அங்கே கழித்தோம். என்னுடைய மாமா மாமி பிரசவத்திற்கு வந்திருந்தார்கள். அவர்களுடனும் சிறிது நேரம் கழித்தோம்.

ஆரம்பித்த வேலையே விட்டு எங்கோ போகிறேன். நான் கொஞ்சம் மெலிந்த உடல் உடையவள். திருமணத்திற்கு முன் மிகவும் சின்ன பெண் போல் இருப்பேன். இரண்டு குழந்தைகள் பிறந்தவுடன் சிறிது உடல் பூசியது போல் உள்ளது. அதிலும் சி - செக்ஷன் ஆனதால், போன வருடம் சிறிது அடி வயிறு பெருக்க துவங்கியது. உடல் எடை கூட துடங்கியது. இந்தியாவிலிருந்து தைத்து கொண்டுவந்த துணிகள் அனைத்தும் கொள்ளவில்லை. அப்போது என் உணவு வகைகளை மாற்றி உண்ண துவங்கினேன். காலையில் காண் பிளக்ஸ், வைட் பிரெட் சாபிட்டுவந்த நான் எனது காலை உணவை ஒட்சாக மாற்றினேன். மேலும் (என்னவரின் ஆலோசனைப்படி) உடற்பயிற்சி செய்ய துவங்கினேன். முதலில் சிறிது கடினமாக இருந்தாலும் இப்போது கடினமாக தெரியவில்லை. சிறிது தொட்ட வேலை செய்கிறேன். இவை அனைத்தும் மிக மிக எளிதாக அதே நேரம் எனக்கு, என் உடலுக்கு பயிற்சியாக இருக்குமாறு செய்கிறேன். இதனுடன், இரண்டு குழந்தைகளை சமாளிப்பதும், வீட்டு வேலை, துணி துவைத்தல் என்று என் நேரமும் நல்ல படியாக சென்று கொண்டு இருக்கிறது.

இப்போது உடல் நான் சொல்லவதை கேட்கிறது. அடிவயிறு நன்றாக குறைந்துள்ளது. அரிசி சாதம் சாபிடுவதையும் சிறிது குறித்துள்ளேன். சாம்பார், ரசம் மற்றும் தயிர் சாதம் என்று சென்றுகொண்டிருந்த என் பழக்கம், இப்போது சாம்பார், தயிர் மற்றும் காய்கறி அல்லது ரசம், தயிர் மற்றும் காய்கறி, பழவகைகள் சிறிது என்று சாப்பிட்டு வருகிறேன்.

மாமாவின் பெண் வீட்டிற்கு சென்ற பொது, மாமி சாதம் பரிமாறும் பொழுது நிறைய நிறைய சாதம் போட்டு சாபிடுமாறு வற்புறுத்தினார். நான் என் உணவு பழக்கத்தை கூறியவுடன், அவர்கள் (மாமாவும் மாமியும்) சிரிக்க ஆரம்பித்து விட்டனர். இப்படி சாப்பிட்டால் எங்கேந்து உடம்பு பெருக்கர்த்து என்ற கேள்வி வேறு?

இதற்கு மேல், மாமியோ, இரண்டு குழந்தை பிறந்து விட்டது இன்னும் எதற்கு உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாடு என்ற கேள்வி வேறு. இரண்டு குழந்தை பிறந்தால் உடற்பயிற்சி செய்ய வேண்டிய அவசியம் இல்லை - எல்லாம் தன் முடிஞ்சு விட்டதே என்னும் எதுக்கு உடம்பை அழகா வெச்சுக்கணும் என்ற எண்ணம் இன்றும் நம் நாட்டில் வழக்கத்தில் இருப்பது மிகவும் வருத்தப்படவேண்டிய ஒரு விஷயம். எத்தனை குழந்தை பிறந்தாலும் நம் உடலை நாம் தன் பார்த்துக்கொள்ள வேண்டும் பிற்காலத்தில், நம் குழந்தைகளுக்கு நம்மால் எந்த விதமான தொந்தரவும் இருக்க கூடாது என்ற எண்ணம் இன்று நம் மக்களிடையே (ஒரு சிலரிடம்) இருப்பது மிகவும் வரவேற்க வேண்டிய ஒன்று. நம் நாட்டில் மும்பு இருந்தது போன்று கூட்டு குடித்தனம் என்ற வழக்கம் இன்று மிகவும் குறைந்து வரும் வேளையில், பிற்காலத்தில் நமக்கு உடலுக்கு எந்த நோய் நொடியும் வராமல் இருக்க இப்போதே சில வழிமுறைகளை பின் பற்றுவது தவறு இல்லை என்பது என் கருத்து.

இவை அனைத்திற்கும் மேல், அவர்கள் வீட்டில் இருந்து கிளம்பும் பொழுது, மாமாவின் கமெண்ட் - இன்னும் இரண்டு அல்லது மூன்று வருடத்தில், உன் பெண்களுடன் நீ வெளியில் செல்லும் பொழுது எல்லோரும் உன்னை அவர்களின் அக்காவா? என்று கேட்பார்கள் அதனால் இப்போதே கொஞ்சம் உடம்பை ஏற்றும் வழியை பார் என்றார். நான் அவரிடம்மற்றவர் அப்படி கூறுவது எனக்கு ஒரு கம்ப்ளிமேன்ட் என்று சொல்லி மேலும், இபோதுள்ள பெண் குழந்தைகள் தங்கள் அம்மா சிறிது நாகரிகம் தெரிந்தவர்களாகவும், அவர்களுடன் ஜிம், யோகா, போன்ற இடங்களுக்கு வரவேண்டும் என்றே விரும்புகிறார்கள் அதற்கு நான் என் உடலை நன்றாக வைத்துக்கொள்ள வேண்டும். எனக்கு இப்படி இருப்பதே பெட்டேர் என்று கூறிவிட்டு வந்தேன்.

இதில் என் மாமா மாமியின் தவறு ஒன்றும் இல்லை. நம் நாட்டில் இன்றும் பல பெண்கள் குழந்தை பிறந்து விட்டால் எல்லாம் முடிந்து விட்டது. அதற்கு மேல் நாம் நம் உடலை கவனித்துக்கொள்ள வேண்டியது இல்லை என்ற எண்ணம் வைத்துக்கொண்டு இருக்கிறார்கள். அது மிகவும் தவறு. அடுத்தவர்களுக்காக இல்லை என்றாலும் நமக்காக நம் உடலை காக்கவேண்டும். நாம் காலை எழுந்து பல் துலக்கும் பொழுது நம் முகத்தை, நம் உடலை கண்ணாடியில் பார்க்கும்பொழுது, நமக்கு ஒரு புத்துணர்ச்சி வரவேண்டும். அப்படி வந்தால் தன் நம்முடைய அன்றைய நாள் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து.

குமுதம் புத்தகத்தில் ஒரு சில வாரங்கள் முன்பு ஒரு செய்தி படித்தேன். சென்னையில் லே மெரிடியன் ஹோட்டல் இல் நடுத்தர வர்க்க குடும்ப பெண்களுக்கு ஒரு ஜிம் துவங்கி நடத்தி வருகிறார்கள். நம்மால் வீட்டில் உடல் பயிற்சி செய்ய முடியவில்லை என்றாலும் இந்த மாதிரி இடங்களுக்கு சென்று சிறிது நேரம் பயிற்சி செய்து வருவது நல்லது.

எனக்கு தெரிந்த பெண் ஒருத்திக்கு குழந்தை பிரசவத்திற்கு அவளுடைய அம்மா வந்திருந்தார். அவர் குழந்தை பிறந்தவுடன் அவளை ஒரு உடற்பயிற்சியும் செய்ய விடாமல் (முதல் ஆறு மாதத்திற்கு) தானே எல்லா வேலையும் செய்து பார்த்துக்கொண்டு இருந்தார். குழந்தையாய் பார்க்க இதே போல் நானும் என்னவரும் சென்ற பொழுது குழந்தை பிறந்து மூன்று மாதங்கள் ஆகி இருந்தது. அப்போது அந்த பெண்ணிற்கு வயிற்றில் ஒரு குழந்தை இருப்பது போல் பெருத்து இருந்தது. இங்கு மருத்துவர்கள் அவளை உடற்பயிற்சி செய்ய கூறியும், அம்மாவின் பேச்சை கேட்டு (நம்மூர்ல அதெல்லாம் வழக்கம் இல்லை பச்ச உடம்புகாரிய எப்படி வேலை வாங்கறது. எங்கேந்து அவளால உடற்பயிற்சி செய்யமுடியும் என்று கூறி ஒன்றும் செய்ய விடவில்லை), பேசாமல் நன்றாக சாப்பிட்டு தூங்கி இருக்கிறாள். இன்றும் (நன்கு வருடத்திற்கு பிறகு) அவளுக்கு வயிறு பெருத்து, உடல் பெருத்து ஒரு வேலையும் செய்ய முடியவில்லை. மருத்துவர்கள் அனைவரும் padithuvittu தன் அந்த வேலைக்கு வந்திருக்கிறார்கள் என்பது நம் மக்களுக்கு சில நேரங்களில் மறந்து விடுகிறது. எல்லா இடத்திலும், எல்லா வ்யாதிக்கும் பாட்டி வைத்தியம் சாத்தியமாகும் என்பது மூட நம்பிக்கை.

"உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே" என்ற திருமூலரின் திரு மந்திரத்தை நாம் அனைவரும் கருத்தில் கொண்டு, முடிந்தவரை நல்ல ஆரோக்கியமான உணவு வகைகளை உண்டு, நம் உடலை பேணி காக்க வேண்டியது நம் அனைவரின் கடமை.

Tuesday, March 4, 2008

Oats

ஓட்ஸ் - பெரும்பாலும் நாம் உட்கொள்ளும் காலை உணவு. ஒரு புத்தகத்தில் படித்தவற்றை உங்களுடன் சில வரிகள் பகிர்ந்துகொள்ள விரும்பி எழுத ஆரம்பித்த ஒரு போஸ்ட். தானிய வகையை சார்ந்த இதன் பயன் நம்மில் பலரும் தெரிந்து கொள்ளவில்லை. சொல்லப்போனால் ஒட்சைவிடவும் சிறப்பான மற்றொரு தானியம் இல்லை என்பதே உண்மை. அந்த அளவுக்கு அது ஆரோக்கியத்தை வழங்கக்கூடியது.

இன்றைய காலகட்டத்தில் வியர்வை சிந்தி வேலை செய்யும் நிலைமை நம்மில் பலருக்கும் இல்லை என்பதே உண்மை. உடலுழைப்பு என்பது வீட்டிலும் அலுவலகத்திலும் பெரிதும் குறைந்து விட்டது என்பதே உண்மை. இந்நிலையில் நமது உணவு பழக்கத்தில் சரிவிகித சத்துக்கள் இல்லை என்பதால் நோய் நம்மை அடிமைபடுதுகிறது. இவற்றில் சக்கரை நோய், இதய நோய் மிகப்பெரிய வில்லன்கள்.

நார் சத்து மிகுந்த உணவு பொருட்களை உட்கொள்வதே நாம் நமை தொடரும் பெரும்பாலான நோய்களிலிருந்து தப்புவதற்கு வழி. சக்கரை நோயாளிகளுக்கு நார் சத்து மிகுந்த உணவுவகைகள் மிகவும் முக்கியம். ரத்தத்தில் கொழுப்பை குறைக்க, சக்கரையின் அளவு அதிகரிப்பதை தடுக்க புற்றுநோயை விரட்ட, மலசிக்களை களைய, உடல் எடையை குறைக்க என அனைத்து வழிகளிலும் ஒட்சில் உள்ள நார் சத்துக்கள் உதவுகின்றன.
இதனை குழந்தை முதல் பெரியவர் வரை அனைவரும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இதில் உள்ள நார் சத்து மிகுதியால் பெரும்பாலான நோய்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியாக பயன் படுகிறது. காலை உணவுடன் ஒரு கப் ஓட்ஸ் கஞ்சி பருகி வந்தால் அது நமக்கு அதிகபடியான ஆரோக்கியத்தை தரும். ஒட்சில் எந்த கலபடமும் இதுவரை செய்யப்படவில்லை. இதில் புரதம் அதிகப்படியாக உள்ளது. அதனுடன் வைட்டமின் இ, வி, இரும்புசது, கால்சியம், போட்டசயும் ஆகியவை உள்ளது.

சக்கரை நோயாளிகளுக்கு உணவில் தினமும் இருவத்தி ஐந்து முதல் முப்பது கிராம் வரை நார்ச்சத்து தேவை. எனவே அவர்கள் ஓட்ஸ், பழங்கள், ஆகியவற்றை காலை உணவாக உட்கொள்வது நல்லது.

Wednesday, February 20, 2008

My Pregnancy

ட்வின்ஸ் - இரட்டை குழந்தைகள். கேட்பதற்கு மிகவும் ஆசையாகவும் சந்தோஷமாகவும் இருக்கும் ஒரு விஷயம். ஆனால் வளர்பதற்குஎன்னிடம் கேளுங்கள்! நான் "அனைத்தும் தெரிந்த ஒளவையார்" இல்லை. ஆனாலும் என்னுடைய சொந்த சாகித்தியத்தை இங்கு என்னால் பாட முடியும் என நினைக்கிறேன். ஆம்! எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் (இரட்டையர்!).

முதல் பிரசவம் என்பது ஒவ்வொரு பெணிர்க்கும் ஒரு மறுபிறவி - எங்கோ படித்து யாரோ சொல்லி கேள்வி! சிறுவயதில் அதன் உண்மை நமக்கு தெரிய வாய்ப்பு இல்லை. திருமணம் ஆனவுடன் நம் வயிற்றில் கரு உண்டானவுடன் நமக்கு நாமே அனுபவிக்கும் (முதலில் பயப்படும்!!) ஒரு உணர்வு என்பது என் கருத்து. இதில் இரட்டை குழந்தை என்று தெரிந்தவுடன் முதலில் சந்தோஷபட்டாலும் உடனே நம் மனதில் குடி கொள்வது ஒரு வித பயம். அம்மா அப்பாவை பிரிந்து தனியாக கண் காணாத ஒரு ஊரில் இருந்து கொண்டு, தொலைபேசியில் அவர்களிடம் அறிவுரை பெற்றுக்கொண்டு, மசக்கை என்ற பெயரில் வாந்தி எடுத்துக்கொண்டு (!), சரவணபவனில் என் எதிரே உட்கார்ந்து ரவ தோசையை நன்றாக வெட்டும் என்னவரின் நண்பர் மனைவியை பார்த்து வயிறு எரிந்து! அப்பப்பா! பாக்யராஜ் திரைப்படம் போல் "அந்த முதல் மூன்று மாதங்கள்" - எனக்கு என் விஷயத்தில் நான் எப்போதும் மறக்க நினைக்கும் நாட்கள். ஒரு வேலையிலும் ஈடுபாடு இல்லாமல், எப்போ பார்த்தாலும் சுருண்டு சுருண்டு படுத்துண்டு, என்னால் மீண்டும் அதை நினைத்து பார்க்க முடியவில்லை. இரட்டை குழந்தை ஆனதால் மசக்கை வாந்தி என்னை ஒரு கை பார்த்தது. மாதாமாதம் செக் அப் சென்று வந்து கொண்டு, வயிற்றில் குழந்தை (கள்) நன்றாக வளர என்னென்ன சாப்பிட வேண்டும் என்று தொலைபேசி மூலம் சில அறிவுரைகள், கணிபொறி மூலம் சில அறிவுரைகள் - இப்படியாக முதல் ஆறு மாதம் சென்றது.

நன்கு, ஐந்து, ஆறு ஆகிய மாதங்கள் மிகவும் அருமையான மாதங்கள். நான் சொன்னதை என் உடம்பு கேட்ட மாதங்கள். ஒவ்வொரு நாளும் பெரிதாகும் வயிற்றை பார்த்து சந்தோஷப்பட்டு(கொஞ்சம் பயத்து), maternity கிளோதிங்
என்ற பெயரில் தொளதொள ஆடை அணிந்து, சில சமயம் என்னவரின் டிஷிர்ட் அணிந்து, நான் விரும்பியதை சாப்பிட்டு, என்னவருடன் பல இடங்களுக்கு சுற்றி (வயிற்றில் இரண்டை வைத்துக்கொண்டு!), சாப்பாடு மூட்டை கட்டிக் கொண்டு போய் விருமாண்டி படம் பார்த்து(ரொம்ப முக்கியம்- யாரோ சொல்வது என் காதில் விழுகிறது) , சாப்பாடு மூட்டை கட்டிக் கொண்டு வீட்டிற்க்கு அருகில் இருக்கும் லைப்ரரி ஒவ்வொரு வாரமும் சென்று அங்கு இருந்த பிரேக்நன்சி புத்தகங்களை கரைத்து குடித்து (இறுதியில் எனக்கு என் விஷயத்தில் ஒன்றும் உபயோகம் ஆகவில்லை என்பது வேறு விஷயம்), ஏழாம் மாதம் பிறந்தது. இரட்டை குழந்தைகளுக்கான அடையாளம் சிறிது என்னிடம் காணப்பட்டது. என்னால் என் கால் மெட்டியைபார்க்க முடியாத நிலை. இதில் என்ன ஒரு சந்தோஷம் என்றால் ஏன் இரண்டு இளவரசிகளும் வயிற்றில் நகர தொடங்கினார். (வயித்துலையே அவர்களின் சண்டையை அரம்பிசுட்டானு அப்புறமா தான் எங்களுக்கு தெரிஞ்சுது - ஏன் என்றால் அவ்ளோ அடி வாங்கி இருக்கேன் வயித்துல நான்)

டாக்டர் விசிட் அடித்திக்கொண்டுஇருந்த எங்களுக்கு, வீடு மாற்ற வேண்டிய நிர்ப்பந்தம். கர்பகாலத்தில் வீடு மாற்றக்கூடாது (ஏன்என்று இன்றும் எனக்கு தெரியாது) என்று தொலைபெசியி அறிவுரைகள். என்னவர் காதுகளில் ஒன்றும் விழவில்லை. எட்டாம் மாதம் பிறந்தது. புது வீட்டிற்கும் வந்தாயிற்று. ஒரு பெட்ரூம் அபார்த்மேன்த்ல் இருந்து மூன்று பெட்ரூம் கொண்ட பெரிய வீட்டில் போய் இறங்கினோம். நான் ஏன் வயிற்றை தூக்கி கொண்டு ஒவ்வொரு ரூமாக நடந்து (நடக்க தான் முடிந்தது - வேறு ஒரு வேலையும், சுத்தமும் செய்ய முடியவில்லை என்பது வேறு கதை), எட்டாம் மாதா இறுதி வரை தாக்கு பிடிக்க முடிந்தது எங்களால்.

எங்கள் இளவரசிகளுக்கு அதற்கு மேல் அம்மாவின் வயிற்றில் இருக்க இடம் போற வில்லை. அடுத்த முறை செக் அப் சென்ற பொது டாக்டர் பிபி ஜாஸ்தியா இருக்கு உடனே அட்மிட் பண்ணிடுங்கோனு சொல்லி நாலு நாள் கழிச்சு என்னோட குட்டிஎஸ் இரண்டையும் அழகா வெளில எடுத்தா. அந்த நிமிஷத்தை இப்போ நெனைச்சாலும் மறக்க முடியாத ஒரு சில நிமிடங்கள். (அட நான் கூட சீரியல் டயலாக் எழுதலாம் போல இருக்கே! சரி சரி ரொம்ப டூ மச் வேண்டாம்). அடுத்த ஆறு மாதங்கள் இரவு தூக்கம் என்பது எங்கள் இருவருக்கும் மறந்து போன விஷயம் (தப்பா நெனைசுக்க வேண்டாம் யாரும் குட்டிஎஸ் இருந்ததால சொன்னேன்:) ). அம்மா அப்பாவிற்கு நாங்கள் இங்கு நன்றி கூற கடமை பட்டிருக்கிறோம் இப்படியாக ஓடஆரம்பித்த எங்கள் சம்சார சாகரம் கடவுள் அருளால் இன்று வரை எந்த கஷ்டமும் இல்லாமல் போய் கொண்டிருக்கிறது. இனியும் சாகரம் கரை புரண்டு ஓடும் என்ற நம்பிக்கையுடன் இந்த கதையை இனிதே நிறைவு செய்கிறேன்.

இதன் அடுத்த தொடர்ச்சி இரட்டயர்களின் சண்டைகள், பழக்க வழக்கங்கள்... என தொடரும்.....

Sunday, February 17, 2008

Trip to Delhi & Manali











maanali நெனைக்கும் போதே ரொம்ப ஜில்லுனு இருக்கும் இடம். நானும் என்னவரும் எங்களின் இரண்டாவது ஹனிமூன் சென்ற இடம். எஸ், முதல் ஹனிமூன் ஊட்டி அடுத்தது மணாலி. குழந்தைகளை தாத்தா பாட்டியிடம் விட்டுட்டு நாங்க மட்டும் (!!) போனோம். சென்னை வெயிலில் இருந்து ஒரு வாரம் சென்றோம். சென்னையிலிருந்து டெல்லிக்கு விமானத்தில் சென்று அங்கே டெல்லியில் ஒரு சில இடங்களுக்கு சென்றோம். (டெல்லி வெயிலுக்கு சென்னை வெயிலே தேவலை). மகாத்மா காந்தி சமாதி, நேரு சமாதி, பார்லியாமென்ட், கேட்வேஒப் இந்தியா,ஒரு சில கோவில்கள், ரெட் போர்ட் போன்ற இடங்கள் சுற்றிவிட்டு இரவு மணாலிக்கு பஸ். அடுத்த நாள் காலை மணாலி டௌநில் எங்களை இறக்கி விட்டார்கள். அங்கேந்து எங்கள் ஹோட்டலுக்கு ஆட்டோவில் சென்றோம். குளித்துமுடித்து காலை உணவு சாபிட்டுடு கிளம்பினோம்.

முதலில் எங்களை வசிஷ்ட் குன்ட் என்ற இடத்தில் இறக்கி விட்டார்கள். ஒரு சிறிய கோவில் அதற்குள் ஒரு வெந்நீர் குளம் ஒன்று, எப்போதும்bb வெந்நீர் vanthu கொண்டே இருக்கிறது. அந்த நீருக்கு மருத்துவ குணம் இருப்பதா அங்கிருந்தவர்கள் கூறினார். அங்கு வருபவர்கள் எல்லோரும் அந்த நீரில் குளித்தனர். நாங்கள் இருவரும் கை கால் அளம்பிகொண்டோம் அங்கிருந்து எங்களை இடும்பா கோவிலுக்கு அழைத்துக்கொண்டு சென்றார் கார் டிரைவர். இடும்பா - பஞ்ச பாண்டவர்களில் bheemaninமனைவி. கோவில். மலை மேல் இருப்பதால் சிறிது தூரம் நடக்க நேரிட்டது. நடப்பதற்கு நல்ல சூழல். கோவிலுக்கு பின்னால் பழங்குடி மக்கள் அவர்களின் கடை போட்டு இருந்தனர். உசி, பாசி, ச்வேட்டேர்ஸ் அனைத்தும் மலிவான விலையில் கிடைத்தது. அவர்களின் பாரம்பரிய உடையை அணி
ந்து போட்டோ எடுத்துக்கொள்ளலாம். நாங்களும் எடுத்துக்கொண்டோம.




அடுத்து எங்களை திபெத்திய கோவிலுக்கு அழைத்து சென்றார். மிகவும் பழமையான கோவில். கோவில் வாசல் கடைகளில் மிகவும் அறிய டிபெதிய் பொருட்கள் சிலவற்றைவாங்கிக்கொண்டு கிளம்பினோம். நாங்கள் தங்கி இருந்த ஹோட்டலுக்கு அருகில் பியாஸ் நதி. நதியின் அழகை ரசித்த வண்ணம் ஹோட்டலுக்கு சென்றோம்.
then indiavilirundhu அடுத்த இருந்து வந்தவர்களுக்கு ஒரு நாளைக்கு ஒரு வேலையாவது ரைஸ்வேண்டி இருக்கும். தயிர் சாதம் தன் நம் உலகமே!! எங்களுக்கு, எங்கள் ஹோட்டல் அருகே ஒரு சௌத் இந்தியன் ஹோட்டல் மட்டுமே கண்டு பிடிக்க முடிந்தது. அதுவும் ஆந்த்ரா ஹோட்டல். எங்களின் இரண்டு நாள் உணவை அடுத்த கழித்தோம்.

எங்களை அடுத்த நாள் ரோட்டங் பாஸ் அழைத்துக்கொண்டு சென்றார். அப்பப்ப என்ன ஒரு பனி.maadu தோல் maadhiri ஒரு ஜாக்கெட் ரெண்ட் பண்ணி koduthaar டிரைவர். அதையும் போட்டுக் கொண்டு மலை erinom . சிறிது நேரம் malail irunthu விட்டு கீழே இறங்கினோம். manaali கடை வீதிகளில் இறக்கி விட்டார். சிறிது நேரம் அங்கே sutrivittu marupadiyum ஹோட்டலுக்கு வந்தோம். அன்று இரவு எங்களுக்கு டெல்லி பஸ்.


டெல்யில் நாங்கள் அடுத்த நாள் காலை வந்து சேர்ந்தோம். வேறு ஒரு ஹோடேளில் தங்கினோம். குளித்து முடித்து உணவு அருந்துவதற்கு சரவணா பவன் (அப்பாடா) கண்டுபிடித்து உணவு அருந்திவிட்டு அங்கிருந்த கடை வீதிகளில் நேரம் கழித்தோம். அடுத்த நாள் ஒரு ற்றாவேல்ஸ்மூலம் ஆக்ரா செல்வதாக பிளான.

adutha நாள் காலை 5. மணிக்கு பஸ். அக்ரவிர்க்கு புறப்பட்டோம். முதலில் ஷாஜஹான் அரண்மனை, அடுத்து தாஜ்மஹால். நல்ல வெயில் காலத்தில் சென்றதால் தாஜ்மகாலில் சச்க்ஸ் போட்டுக் கொண்டு செல்ல வீண்டி இருந்தது. எங்களுக்கு அது தெரியாது. கால் பழுக்க பழுக்க நடந்து அந்த காதல் கல்லறையை பார்த்துட்டு வந்தோம். காதல் மனைவிக்கு ஷாஜஹான் கட்டிய கல்லறை - நேரில் சென்று பார்த்தல் தன் அந் அனுபவம் புரியும்.
அடுத்த நாள் காலை எங்களுக்கு சென்னை பயணம். மனை, டெல்லி நினைவுகளுடன் சென்னை புறப்பட்டோம். வீட்டில் குட்டிஎஸ் இரண்டும் எங்களை பார்த்து ஒரு முக்கால் மணிநேரம் அழுதது. அதுகளுக்கு கடுப்பு. பிறகு அவளை சமதானபடுதிட்டு எங்கள் அடுத்த ரௌந்து வேலைகளை துவங்கினோம்.