இன்று காலை என் பெண்களின் பள்ளியில் எனக்கு காலை சிற்றுண்டி. ஐந்து வயதான என் இரட்டையர் எனக்கு என்ன வேண்டும் என்று கேட்டு அவர்களே எடுத்துக்கொண்டு வந்து எனக்கு பரிமாறினர். ஒரு தாய் என்ற இடத்தில் இருந்து இதை நெனைக்கும் பொது மிகவும் பெருமையாகவும் சந்தோஷமாகவும் இருந்தது. ஆனால் அதே நேரத்தில், oru மகளாக என்னால் என் தாயை நினைத்துப்பார்க்காமல் இருக்க முடியவில்லை.
இந்தியாவில் நான் வளர்ந்த காலத்தில், அன்னையர் தினம் என்று ஒருவரும் கொண்டாடியதாக எனக்கு ஞாபகம் இல்லை. நானும் கல்லூரி வரை படிப்பை முடித்து பிறகு திருமணம் செய்து கொண்டு அமெரிக்கா வந்தவள். இருவத்தி மூன்று வருடங்கள் என் தாயுடன் இருந்த நேரங்களில், அன்னையர் தினம் என்ற ஒன்று இருப்பதே எனக்கு தெரியாது. அப்படியே தெரிந்திருந்தாலும் நான் கொண்டாடி இருப்பேனா என்று தெரியவில்லை. என்னை நினைத்து எனக்கே இன்று மிக வருத்தம். காரணம்? கீழே....
கூட்டுக்குடும்பமாக வாழ்ந்த எங்கள் வீட்டில் என் பெற்றோருக்கு நான் ஒரே பெண். உடன் பிறப்புக்கள் என்று யாரும் கிடையாது. செல்லம் மிக அதிகம். தாத்தா பாட்டி, சித்தி, மாமா என்று எல்லோரும் ஒன்றாக இருந்தோம். அப்பொழுதெல்லாம் எனக்கு வேலை செய்யவேண்டிய அவசியம் இருக்க வில்லை. வீட்டில் நிறைய பேர் இருந்ததால் நான் ஒன்றும் செய்ததில்லை. பிறகு காலத்தின் கட்டாயத்தால் நான் என் பெற்றோருடன் தனியாக ஒரு வீட்டில் குடி புகுந்தோம்.
எனக்கும் பத்து வயதான காலம். என் அம்மா எப்பொழுதும் கொஞ்சமாவது வேல செய்ய கத்துக்கோடி இல்லேன்னா பின்னால கஷ்டம் என்று கூறிக்கொண்டே இருப்பார்கள். அப்பொழுதெல்லாம் என் அப்பாவின் அம்மா எங்களுடன் இருந்தார். அவர் உடனே, இப்போ எதுக்கு அவள வேல செய்ய சொல்லறே. குழந்தை கஷ்டப்பட்டு ஸ்கூலுக்கு (!) போயிட்டு வருது, கல்யாணம் ஆச்சுன்னா இருக்கவே இருக்கே வேலை. இப்போ எதுக்கு செய்யணும். நீ சும்மா தானே ஆத்துல இருக்கே நீ பண்ணு. முடியலைனா எப்போ முடியர்தோ அப்போ பண்ணு என்பார் . மாமியார் என்பதால் என் அம்மாவால் ஒன்றுமே சொல்ல முடியாது. பேசாமல் இருந்துவிடுவார். எப்போதுமே சின்ன குழந்தைகளுக்கு அவர்களுக்கு பிடித்த சாக்லேட் அல்லது ஐஸ்கிரீம் யார் வாங்கி கொடுக்கிறார்களோ அவர்கள் மிகவும் பிடிதவர்களாகிவிடுவர். சிறிது வளர்ந்த குழந்தைகளுக்கு அவர்களக்கு சாதகமாக யார் பேசுகிறார்களோ அவர்களை மிகவும் பிடிக்கும். அந்த வகையில் அந்த வயதில் எனக்கு என் பாட்டியை மிகவும் பிடித்திருந்தது.
சில வருடங்கள் கழிந்து என் பாட்டி என் சித்தப்பா வீட்டிற்கு சென்று விட்டார். மீண்டும் நாங்கள் மட்டும் தனியாக சில காலம் இருந்தோம். அப்பொழுதும் நான் எந்த வேலையிலும் ஒரு சிறு உதவி கூட செய்தது கிடையாது. எங்கேந்து செய்யரது? பழக்கமே இல்லையே! காலத்தின் கட்டயாத்தால் என் இன்னொரு பாட்டி (அம்மாவின் அம்மா) எங்களுடன் வந்து தாங்கும் நிலை ஏற்பட்டது. மீண்டும் எனக்கு அது மிக வசதியாகிப்போனது. பாட்டியும் நல்ல தெம்புடன் இருந்தால் எனக்கு ஒரு வேலையும் இருததில்லை.
கல்லூரி செல்லும் வயது வந்தவுடன் நான் என் சித்தி வீட்டில் தங்கி படித்தேன். அங்கு ஒரு சில வேலைகள் செய்வேன் அவ்வளவு தான். சனி ஞாயிறுகளில் வீட்டிற்கு வரும் போதும் கூட ஒரு கப் காபி கூட நான் என் அம்மாவிற்கு கலந்து குடுத்து கிடையாது. இதை எழுதும்போது என் கண்களில் கண்ணீர் நிறைகிறது. அந்த நேரங்களில் என் அம்மாவிற்கு உடல் நலக்குறைவு ஏற்பட ஆரம்பித்தது. ஹெர்னியா என்னும் நோயால் அவதி பட ஆரம்பித்தாள். அறுவை சிகிச்சை செய்ய முடியாது என்று மருத்துவர்கள் கூறியதால், எங்களால் அதுவும் செய்து அவளை குணப்படுத்த முடியவில்லை.
இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் சிறுவயது முதலே நான் என் பாட்டியை அம்மா என்று கூப்பிட்டு பழக்கம் இருந்ததால், என் அம்மா உடல் நலம் இன்றி தவித்த பொது கூட எனக்கு பெரிதாக ஒன்றும் வருத்தம் தோன்றவில்லை.கூட்டுக்குடும்பமாக இருந்ததால் எல்லோரும் என் பாட்டியை அம்மா என்று கூபிடுவார்கள். அதனால் நானும் அப்படியே கூப்பிட்டு பழக்க பட்டேன். என் அம்மாவின் கடைசி மூச்சு வரை நான் அவளை அம்மா என்று கூப்பிட வில்லை, கூப்பிடவும் தோன்றவில்லை. எத்தனை மோசமான பெண்ணாக இருந்திருக்கிறேன் என்று இன்று நெனைக்கும் பொழுது மனது துக்கத்தால் கனக்கிறது.
ஒரு தாயான பிறகு என் குழந்தைகளிடம் நான் என்ன என்ன எதிர்பார்கிறேனோ அதை எல்லாம் என் அம்மாவும் என்னிடம் எதிர்பார்த்திருப்பாள் என்று நெனைக்கும் பொழுது ஒவொருமுறையும் மனம் வலிக்கிறது. தன் குழந்தைகள் எத்தனை தவறுகள் செய்தாலும் எந்த தாயும் குழந்தைகளை மனசார கடிந்து பேசவோ, சபிக்கவோ மாட்டாள். அதனால் என் அம்மாவும் நான் செய்த தவறுகளை மன்னித்துவிடுவாள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இப்படி வருதபடுபவள் நான் மட்டும் அல்ல என்பது தான் சத்தியமான உண்மை. இன்றும் நம் நாட்டில் கூட்டு குடும்பங்கள் இருக்கிறது. அங்கு வளரும் குழந்தைகளுக்கு எத்தனையோ நல்ல விஷயங்கள் எல்லோருடனும் நட்பு, தாத்தா, பாட்டியின் அரவணைப்பு என்று பல நல்ல விஷயங்கள் நடந்தாலும், பேரன் பேத்தி என்று வரும் பட்சத்தில், என் பாட்டிகள் நடந்துகொண்டது போல் தான் எல்லா பாட்டிகளும் நடந்து கொள்கிறார்கள் என்பதை யாராலும் மறுக்க முடியாது. ஆயினும் ஒரு சிலர் ஒரே வீட்டில் இருந்தாலும் பெற்றோர் குழந்தைகளை கண்டிக்கும் விஷயத்தில் தலை இடுவதில்லை. என்னை பொறுத்தவரை நான் அவர்களை தலை வணங்குகிறேன். நான் என் அம்மாவிடன் நடந்துக்கொண்டது போல் என் பெண்கள் என்னிடம் நடக்க மாட்டர்கள் என்று நம்புகிறேன். நம்பிக்கை தானே வாழக்கை!
இத்தனை விஷயத்திலும் எனக்கு ஒரே சந்தோசம் என்னவென்றால் என் இரட்டையர்களில் ஒருத்தி என் அம்மாவை அப்படியே உரித்து வைத்து போல் இருக்கிறாள். குரல், முக ஜாடை, நடை எல்லாமே அப்படியே என் அம்மாவை பார்ப்பது போலவே இருக்கிறது. என் அம்மா என்னை விட்டு போனாலும், என் பெண் வடிவில் நான் அவளை தினமும் பார்க்கிறேன்.
ஆகவே பெண்களே உங்கள் அம்மா கூறுவதை ஒரு நிமிடம் நின்று காது கொடுத்து கேளுங்கள். அதில் ஒன்றும் நமக்கு குறைந்து விடப்போவதில்லை. அவர்கள் கூறும் அறிவுரையை நீங்கள் அப்படியே கடைபிடிக்க வேண்டும் என்றும் நான் கூறவில்லை. ஆனால் காது கொடுத்து கேட்பதில் தப்பில்லை. பின் நாளில் என்னைப்போல் வருதப்பட்மாடீர்கள்.
Friday, May 8, 2009
அன்னையர் தினம்
Labels: அன்னையர் தினம்
at 10:53 AM
Subscribe to:
Post Comments (Atom)

8 Nanbar Karuthu:
Happy mother's day. Thanks for reminding my mum
thanks Shankara Narayanan. I was so emotional today and thought of writing it down..
வாழ்த்துகள்
Happy Mother's day
Very Nice and Touching!!!
great blog keep up the good work
HAPPY MOTHER's DAY.... (THOUGH BELATED).
I just got to know about your blog and visited....
From now, will visit continuously..
Have to read all your writings and comment..
BTW, feel free to visit my blogs and comment..
www.edakumadaku.blogspot.com
www.jokkiri.blogspot.com
Thanks in advance....
Belated wishes ! such a nice article from you ! a good in piece in your blog and a very good advice to ALL ! A MOTHER is a mother whatever be her age, whatever be our age, irrespective of the fact that she is alive physically or not! nice and thanks for nourishing the thoughts in me about my mother also ! - K.Balaji
Post a Comment